This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?

Parenting Tips
Written by - Dhanalakshmi Pillaiகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 3, 2023
நேர்மறையான குழந்தை வளர்ப்பின் நன்மைகள் என்னென்ன?
Read time4 min
  • உங்கள் குழந்தைகள் வளரும்போது, பெற்றோராக எப்போதும் அவர்களுடன் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் சிறப்பாக நடந்துகொள்வதற்கும் ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்றுவதற்கும் நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அவர்களுடனான உங்கள் தொடர்பை எவ்வாறு மேம்படுத்தலாம்?

  • நேர்மறையான குழந்தை வளர்ப்புக்கான டிப்ஸ்களை இன்டர்நெட்டில் பல்வேறு வழிகளில் உங்களால் காண முடியும். இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட குழந்தை வளர்ப்பு ஸ்டைல் தொடர்ந்து சிறந்த பலன்களை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது. "நல்ல குழந்தை வளர்ப்புக்கான டிப்ஸ்கள்" என்பது குழந்தை வளர்ப்புக்கான இந்த அணுகுமுறையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

  • நேர்மறையான குழந்தை வளர்ப்பானது குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்காக அவர்களை அடிப்பது அல்லது தண்டிப்பது என்றில்லாமல் அவர்களிடம் நேர்மறையாக அணுகுவதற்கு பயன்படுகிறது. மோசமான நடத்தைக்காக தங்கள் குழந்தையை பெற்றோர்கள் தண்டிப்பதற்கு பதிலாக விரும்பத்தக்க நடத்தையை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். இந்த உத்தியானது, குழந்தை தவறாக நடந்துகொள்ளும் போது மட்டுமல்லாமல், எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்க நடத்தைகளில் கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் டீனேஜ் பிள்ளைகளின் வளர்ப்புக்கான டிப்ஸ்களின் செயல்முறையைப் புரிந்துகொள்வதும் அவசியம்.

  • கூடுதலாக, குழந்தைகள் அவர்களின் நடத்தை வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபடுவதால், நேர்மறையான குழந்தை வளர்ப்புக்கான முறை அவர்களுக்கு சுதந்திரத்தைக் கற்பிக்கிறது. மேலும், அவர்களின் சுயமரியாதையை வளர்க்கவும் உதவுகிறது. நேர்மறையான குழந்தை வளர்ப்பு முறையானது, குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையிலான தகவல் தொடர்பை மேம்படுத்தும் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இம்முறையானது சரிசம வெற்றியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

நல்ல குழந்தை வளர்ப்பு பாணியின் கூடுதல் நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

பெற்றோர்-குழந்தை இடையிலான உறவு சிறப்பாக இருக்கும்

பெற்றோர்-குழந்தை இடையிலான பிணைப்பு, நேர்மறையான குழந்தை வளர்ப்பு முறைகளிகள் மூலம் பயன் பெறுகிறது. குழந்தைகளின் நன்னடத்தை வளர்ச்சிக்கான சிறந்த குழந்தை வளர்ப்புக்கான டிப்ஸ்கள் காரணமாக குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு பலப்படுத்தப்படுகிறது. பெற்றோர்களுடனான சிறந்த உறவின் காரணமாக, பிள்ளைகள் அவர்கள் மீது அதிக நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். கடுமையான அல்லது விரும்பத்தகாத வகையில் பெற்றோருடன் சிறந்த பிணைப்பே இல்லாமல் வளர்க்கப்படுபவர்கள் எதிர்காலத்தில் மன நல கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், நேர்மறையான குழந்தை வளர்ப்பு அணுகுமுறையால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான பிணைப்பு பலப்படும்.

மேலும் பயனுள்ள தகவல்பரிமாற்றம்

ஹெல்த்தியான குழந்தை வளர்ப்பு டிப்ஸ்களில், ஒரு விரோதமான முறையில் அல்லது கடுமையாக பிள்ளைகளிடம் நடந்து கொள்வதற்கு மாறாக செயல் சார்ந்த, நேர்மறையான முறையில் குழந்தைகளுடன் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். நேர்மறையான குழந்தை வளர்ப்பு முறை திறந்த மனதுடன் பிள்ளைகளுடன் பேசுவதை சார்ந்திருக்கிறது. பிள்ளைகள் தங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பேச ஊக்குவிக்கப்பட வேண்டும். சிறப்பான நடத்தைகளால் எவ்வாறு சிறந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர் விளக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டு வருவதற்கு பெற்றோர் இதை செய்ய வேண்டும்.

பிள்ளைகளை பேசுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் நம்பகமான பிணைப்பை அவர்களுடன் பெற்றோர் ஏற்படுத்திக் கொள்ளலாம். பிள்ளைகளை பேசுவதற்கும் அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பதும் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கான இன்றியமையாத அங்கமாகும். குழந்தை வளர்ப்புக்கான பரிந்துரைகளில் இவை அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.

சுய மரியாதை மற்றும் மகிழ்ச்சி

நம்பிக்கை மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்பு ஆகிய குழந்தை வளர்ப்புக்கான டிப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியையும் சுயமரியாதையையும் அதிகரிக்க முடியும். பிள்ளைகளை தண்டிப்பதை விட்டுவிட்டு, அவர்களை ஊக்குவித்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால், உங்கள் குழந்தையின் வாழ்க்கைக் கண்ணோட்டம் மேம்படும். அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களின் பிழைகள் மற்றும் குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக நினைப்பதைக் காட்டிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பார்ப்பார்கள்.

இதையும் படிக்கலாமே! - பேரண்ட்டிங் முறை குழந்தை வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?

காலப்போக்கில் எதிர்மறையான நடத்தையின் அளவு குறைகிறது.

பிள்ளைகள் தங்களுக்கென்று சில விதிகளை அமல்படுத்தி பெற்றோரின் தண்டனையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது, பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் எழக் கூடும். குழந்தை வளர்ப்புக்கான அறிவுரைகளில் ஒன்றை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதாவது, உங்கள் குழந்தைகளுக்கான எல்லையை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். வித்தியாசம் என்னவென்றால், மோசமான நடத்தையில் நீங்கள் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான மாற்று ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவீர்கள். இதனால், உங்கள் பிள்ளைகளுடன் மோதல்கள் எழாது.

Article Posted Under

Related Articles

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.